டோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர் தான்.. மைதானம் தான் கடினமாக இருந்தது! அவுஸ்திரேலிய வீரர் ஆதரவு

0

விசாகப்பட்டினம் மைதானம் ஓட்டங்கள் எடுக்க சிரமமாக தான் இருந்தது என டோனிக்கு ஆதரவு அளித்து அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 20 ஓவர்கள் ஆடிய இந்திய அணி வெறும் 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

நம்பிக்கை நட்சத்திரம் டோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 29 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இதனால் டோனியின் பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக கடைசி ஓவரில் கூட 5 பந்துகளில் டோனி ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் தான் வெற்றி இலக்கை எட்டியது. கடைசி 10 ஓவர்களை விளையாடிய இரு அணிகளுமே ஓட்டங்கள் எடுக்க சிரமப்பட்டன.

இந்நிலையில், டோனிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மைதானம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘விக்கெட் வீழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சீரான ஸ்டிரைக் ரேட் என்பது இந்த மைதானத்தில் போதுமானது. ஒரு பக்கம் விக்கெட் சரியும் போது எந்த பேட்ஸ்மேனுக்கும் அடித்து விளையாடுவது சிரமம் தான்.

டோனி ஒரு உலக தரம் வாய்ந்த பினிஷர் தான். சரியான ஷாட் அடிப்பதற்கு மிகவும் முயற்சித்தார். அவர் இடத்தில் இருந்து முயற்சித்தது சரியே. கடைசி ஓவரில் தான் அவர் ஒரு சிக்சர் அடித்தார். அந்த அளவில் அடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

டோனியின் மந்தமான ஆட்டம் காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என ஒருபுறம் கோரிக்கைகள் எழுந்துள்ளன நிலையில், எதிரணி வீரர் ஒருவர் டோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com