தமிழகத்தை உலுக்கிய சம்பவம்: ஹரிணியை கடத்திய வீரபாண்டியன் தற்கொலை முயற்சி

0

தமிழகத்தில் சிறுமி ஹரிணியை கடத்திய வீரபாண்டியன் பொலிசாருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி கடத்தப்பட்டு, நூறு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டார். இந்நிலையில் ஹரிணியைக் கடத்திய வீரபாண்டியன் தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னர், பொலிசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் சங்கீதாவின் தங்கை தனலட்சுமியுடன் ஊட்டிக்கு சென்ற வீரபாண்டியன், அங்கு தான் கையில் வைத்திருந்த மொத்த பணத்தையும் செலவு செய்துள்ளார்.

அதன் பிறகு பணம் மொத்தமும் செலவானதுடன், வேலையும் இல்லாத நிலையில் பொலிசார் தன்னை தேடுவதை வீரபாண்டியன் அறிந்துள்ளார்.

இந்நிலையில், பொலிசார் தன்னை எப்படியும் பிடித்து விடுவார்கள் என்று நினைத்து பயந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார். அதன்படி அரளி விதையை அரைத்து சாப்பிட்ட வீரபாண்டியன், ஆற்றங்கரை ஓரத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட கிராம மக்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு வீரபாண்டியன் குணமடைந்ததைத் தொடர்ந்து அவரை டிஸ்சார்ஜ் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, என்னை எப்படியும் பொலிசார் பிடித்து விடுவார்கள். ஓடி ஒளியக்கூட என்னிடம் பணம் இல்லை என வீரபாண்டியன் கிராமத்தினரிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com