தாயின் கவனயீனத்தால் வீதியில் குழந்தைக்கு ஏற்படவிருந்த பேராபத்து! நடந்தது என்ன..?

0

நடைமுறையில் சிலர் குழந்தை ஒன்றை பெற்றெடுப்பதற்காக பல வருடங்கள் தவம் கிடக்கின்றனர்.

சிலர் பிரசவித்த குழந்தைகளை குப்பை தொட்டிகள், நீர் நிலைகளில் தூக்கியெறிந்து விடுவது மாத்திரமின்றி சிலர் குழி தோன்றி உயிருடன் புதைக்கின்றது.

இதுதான் இன்றைய உலகம்…. எனினும் சிலர் குழந்தைகளை தன்னுடைய கண்களை போன்று பாதுகாக்கின்றனர்…அவர்களின் சிலரின் கவனக்குறைவால் குழந்தைகள் வாகன விபத்துக்களாலும், தாக்குதல்களாலும் மரணத்தை தழுவிக்கொள்கின்றன.

அது போன்ற சம்பவம் ஒன்று இன்று இணையத்தளங்களில் வைரலாக பரவி வருவதுடன் இந்த காணொளியிலும் பதிவாகியுள்ளது.

தாய் ஒருவரின் கவனயீனத்தால், பேருந்து மோத அபாய நிலைக்கு முகங்கொடுத்த குழந்தையொன்று தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.

ஒரு தாய் ஒருவர் பிரிதொரு பெண்ணுடன் தனது குழந்தையுடன் உரையாடிக்கொண்டிருக்கையில்.. குழந்தையை தனது கைவசமிருந்து இறக்கி விடுகின்றார்.

இதன்போது குழந்தை தனது தாயிடமிருந்து விலகி அங்குமிங்கும் சென்று குதூகளிக்கின்றது.

சிறிது நேரத்தில் வீதிக்கு ஓடோடி செல்கின்றது அந்த குழந்தை.

அந்த சந்தரப்பத்தில் அதிவேகத்தில் பயணிக்கும் பயணிகள் பேருந்து ஒன்றும் வருகின்றது.

குழந்தைக்கு விலகி நிற்கும் அளவிற்கு பக்குவம் இல்லை…. குழந்தைக்கு அருகில் பேருந்து வருகின்றது… பேருந்தின் முன்பக்கத்திலுள்ள சில்லுகள் சற்று விலகி செல்ல பின் பக்கத்தில் உள்ள சில்லும் குழந்தையை அண்மிக்கின்றது.

பேருந்து பயணித்த வேகத்தில் கிளம்பிய காற்றினால் குழந்தை தள்ளப்படுகின்றது. பின் சில்லில் சிக்குண்டு மரணத்தை தழுவவிருந்த குழந்தை மயிரிழையில் உயிர் தப்பி தாய் ஓடி வந்து அரவணைத்துக்கொள்கின்றார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com