தினேஷ் கார்த்திக் என்னிடம் கூறியதை நான் அதிகம் யோசிக்கவில்லை: அதிரடி மன்னன் ரஸல்

0

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது தினேஷ் கார்த்திக் தன்னிடம் கூறியதை அதிகம் யோசிக்கவில்லை என ஆந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல் 13 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசி அசத்தினார்.

இதில் 7 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். ரஸலின் அதிரடி ஆட்டத்தினால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற ரஸல் கூறுகையில்,

‘எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நான் பேட் செய்ய இறங்கியபோது, தினேஷ் கார்த்திக் என்னிடம் நாம் சில பந்துகளை கொஞ்சம் Watch செய்வோம் என்றார். ஆனால் அதிகம் சிந்திக்கவில்லை.

28 பந்துகளில் 68 ஓட்டங்கள் அடிக்க வேண்டும். எல்லா நாட்களிலும் இது நிகழ்ந்துவிடாது. பந்து வரும் திசையில் நம் உடல் இருக்க வேண்டும். இதுதான் டி20 கிரிக்கெட்டின் இயல்பு.

ஒரு ஓவர் போதும் ஆட்டத்தை மாற்றுவதற்கு. அதனால் தான் இது முடியாது என்று நான் ஒரு போதும் விட்டுவிடுவதில்லை. களத்தில் நான் இருக்கிறேன் என்றால் எதுவும் சாத்தியம்.

BCCI

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானங்களிலும் ஸ்டாண்ட்ஸுக்கு பந்தை அடித்து என்னை நானே ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன். தாழ்வான ஃபுல்டாஸ்களை அடிப்பது கடினம்.

கண்-கை ஒருங்கிணைவுதான் அனைத்தும். தாழ்வான ஃபுல்டாஸ்களுக்கு நாம் நம் முழு கையையும் கொண்டு செல்ல முடியாது, கையை கொஞ்சம் மடக்கிக் கொண்டு தான் விளாச முடியும்.

நான் விவரிக்க முடியாது, களத்தில் காட்டத்தான் முடியும். நான் Special என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதனை பெரிதாகக் காட்டிக் கொள்வதில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com