திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

0

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் வரட்சியான கால நிலை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதன் காரணமாக தமது நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கந்தளாய் குளத்தினை பயன்படுத்தி, சராசரியாக 74 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதன் காரணமாக தமது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் இருபது அடியாக இருந்தது தற்போது பன்னிரண்டு அடிக்கு குறைவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கந்தளாய் குளத்தில் உள்ள மீனினங்களும் இறந்து மிதந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com