திருப்பதி ஏழுமலையானை முட்டிய மைத்திரி

0

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

சிறப்பு விமானம் மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கிருந்து கார் மூலமாக திருமலைக்கு பயணித்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்ஹால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் ஜனாதிபதியை இதன்போது வரவேற்றனர்.

இன்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, நாளை (17) அதிகாலை சுப்ரபாத சேவையில் குடும்ப சகிதம் கலந்துகொள்ளவுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com