திருமணத்தன்று இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்: கலங்க வைக்கும் சம்பவம்

0

அமெரிக்காவில் திருமணத்தன்று ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்ட புதுமண தம்பதி விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த வில் பைலர். இவர் விவசாய பொறியியல் படித்து வந்ததார்.

இவருக்கும், விவசாய தொலை தொடர்பு படித்து வந்த பைலி ஆக்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அன்று இரவு இருவரும் ஒரு ஹெலிகொப்டரில் பயணம் செய்தனர். அது நடுவானில் பறந்துபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் புதுமண தம்பதிகள் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் இருவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஹெகொப்டரை இயக்கிய விமானி லாரன்ஸ் வியட்நாம் போரில் கலந்து கொண்ட மிகவும் அனுபவம் வாய்ந்தவர் எனவும்,

விபத்துக்கு முன்னர் உதவிக்கு அவர் அழைப்பு விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com