திருமணத்தில் நண்பரின் புதுமனைவியை தவறாக ரசித்த நபர்: டென்ஷனான புதுப்பெண்.. வைரல் புகைப்படம்

0

பிரித்தானியாவில் நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட நபர் நண்பரின் மனைவியை ரசித்து பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hampshire-ஐ சேர்ந்தவர் ரியஸ் கோல்ட்ரே. இவருக்கும் நடாலி என்ற இளம் பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது

இத்திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக ரியஸின் நண்பர் ஆண்டி வில்ஸ் உடனிருந்தார். திருமணத்துக்கு பின்னர் மணமக்களுடன் சேர்ந்து வில்ஸ் புகைப்படம் எடுத்து கொண்டார்.

அந்த புகைப்படத்தில் தனது நண்பர் ரியஸின் மனைவியை தவறாக ரசித்து பார்த்தபடி இருந்தார் வில்ஸ்.

குறித்த புகைப்படத்தை பார்த்து ரியஸும், அவர் மனைவி நடாலியும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஏன் இது போல செய்தாய் என வில்ஸிடம் கோபத்துடன் கேட்டார் ரியஸ்.

அதற்கு, குறும்புதனமாக தான் அப்படி உன் மனைவியை ரசித்து பார்ப்பது போல நான் இருந்தேன். மற்றபடி வேறு எண்ணம் கிடையாது என விளக்கமளித்தார்.

இது குறித்து பேசிய புதுப்பெண் நடாலி, நல்லவேளையாக தனது குறும்புத்தனத்தை வில்ஸ் இதோடு நிறுத்திகொண்டார்.

வேறு எதுவும் விபரீதமாக செய்யாமல் இருந்தாரே என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் திருமண நாளில் எடுக்கப்பட்ட குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com