தேசிய அணிக்கு திரும்பியுள்ள மலிங்காவின் உடல்தகுதி எப்படியுள்ளது? வெளியான தகவல்

0

ஆசிய கிண்ண தொடரில் விளையாடவுள்ள லசித் மலிங்காவின் உடற்தகுதி மெச்சும்படி உள்ளது என இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசின்ஹா கூறியுள்ளார்.

இலங்கை, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்குபெறும் ஆசிய கிண்ண தொடர் இன்று தொடங்கவுள்ளது.

முதல் போட்டியில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதுகின்றன.

ஒரு ஆண்டுக்கு பிறகு இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள லசித் மலிங்கா மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலிங்கா குறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஹதுருசின்ஹா, கிரிக்கெட் போட்டியின் இறுதி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசுபவர்களில் மலிங்காவும் ஒருவர்.

கடந்த சில உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

மலிங்காவின் உடற்தகுதியும் மெச்சும் விதத்தில் உள்ளது என கூறியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com