நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தற்செயலானது அல்ல- அடித்துக்கூறும் டிஜிபி

0

புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என்றும் , அது திட்டமிட்ட கொலை தான் என்றும் கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளமை பாலிவுட் மற்றும் கோலிவுட் வட்டாரத்தை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் விளங்கிய டாக்டர் உமாநாத் கடந்த புதனன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட டிஜிபி ரிஷ்ராஜ் சிங்,’ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அறிந்து கொள்ள அவரிடம் நான் கேட்டபோது, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் தடயங்களும் அவரது மரணம் ஒரு விபத்து அல்ல என்பதை தெரிவிப்பதாகக் அவர் கூறியதாக டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளார்.

அத்துடன் கேரளாவில் பல்வேறு வழக்குகளில் டாக்டர் உமாநாத்தின் தடயவியல் நிபுணத்துவம் காரணமாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து டாக்டர் உமாநாத் கூறியது என்னவென்றால், நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது.

ஒருவேளை அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும், வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது என்றும் , வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் நடிகை மூழ்கி உயிரிழந்திரக்க முடியாது என தெரிவித்ததாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் ஸ்ரீதேவியின் மரணம் மர்ம மரணமாகவே முடிந்துவிட்டதாக டிஜிபி கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் தான் தங்கியிருந்த ஓட்டல் பாத்ரூம் டப்பில் நடிகை ஸ்ரீதேவி இறந்த கிடந்த நிலையில், அவரது மரணம் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com