நண்பர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் மனைவியை சந்திக்க வந்த நபர்.. அதன் பின்னர் நடந்த விபரீதம்

0

மிழகத்தில் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். லொறி ஓட்டுநரான இவர் கெளரி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் புகழ்வின் என்ற ஆண் குழந்தை இருந்தான்.

சுரேசும், கெளரியும் சமீப நாட்களாக வீட்டில் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை, சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததை அடுத்து, அவர்களை உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயினர்.

அதில், சுரேஷ் மட்டும் கழுத்தறுபட்டபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, கெளரியும், புகழ்வின்னும் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தனர். சுரேஷை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அந்த இடத்தில் இருந்து கத்தி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.

பொலிசார், உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து அவர்களின் சந்தேகம் சுரேசின் பக்கம் திரும்பியுள்ளது.

சுரேஷின் நண்பரான வீரக்குமாரும், கெளரியும் சகஜமாக பேசி பழகியதாகக் கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டில் இல்லாத போது கெளரியை சந்திக்க வீரக்குமார் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் நடத்தை மீது சந்தேகம் அடைந்த சுரேஷ், மனைவியையும் குழந்தையையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு தனது கழுத்தை அறுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்

மேலும் சுரேஷ் குணமடைந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com