நாட்கள் இதுபோல் காதலுடன் இருக்க வேண்டும்: கணவர் கோஹ்லியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா

0

நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோஹ்லியுடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற நிலையில், நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தோல்விடையந்தது. இதனால் அடுத்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் நடிகையும், கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் ‘நாட்கள் இதுபோல் காதலுடன் இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com