நான் பிகினி அணிய கூடாது சொல்ல அவர் யார்? வைரலான பிகினி புகைப்படத்திற்கு கரீனா கபூரின் பதில்

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் பிரபலமானது பாலிவுட் நடிகை கரீனா கபூரின் பிகினி புகைப்படம். இப்போட்டோவில் அவர் மட்டும் இல்லை, அவரது கணவர் நடிகர் சயிப் அலிகான் உள்பட அவரது குடும்பமே இருந்தது.

இதனால் கரீனாவை நெட்டிசன்கள் வசைப்பாடியது மட்டுமில்லாமல் சயிப்பையும் சேர்த்து திட்டி தீர்த்தனர். தற்போது இந்த புகைப்படத்திற்காக சயிப்பை திட்டி ஒருவர் போட்ட கமெண்ட்டை நிகழ்ச்சி ஒன்றில் சத்தமாக வாசித்த கரீனா அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், என்னை பிகினி அணியக் கூடாது என்று சொல்ல சயிப் யார்? நீ ஏன் பிகினி அணிகிறாய், நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று சயிப் ஒருபோதும் கூற மாட்டார். எங்களுக்கு இடையே அத்தகைய நம்பிக்கையான உறவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com