பகிடிவதையால் 1,987 பல்கலை மாணவர்கள் கல்வியை கைவிட்டனர்! வெளியான அதிர்ச்சி தகவல்

0

பல்கலைக்கழக அனுமதி பெற்று பகிடிவதை காரணமாக 1,987 பல்கலை மாணவர்கள் அவர்களது உயர் கல்வி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் என உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பகிடிவதை குறித்து அரசு இனிமேலும் பொறுமைக் கொள்கையை கடைப்பிடிக்கப் போவதில்லை என்ற கொள்கையில் இருந்த போதிலும், பகிடிவதை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என அவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்.

அவர் கூறுகையில், “பகிடிவதை செயற்பாடுகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறாமல் இருக்கும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், உபவேந்தர்களுக்கு பகிடிவதையில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டவுள்ளது.

அத்துடன் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் பல்கலைக்கழகளில் நிகழும் போது முறைப்பாடு செய்வதற்காக அவசர அழைப்பு சேவையொன்றையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com