Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

படைப்பு சுதந்திரத்திற்கு திமுக துணை நிற்கும்; மெர்சலுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின்!

0

படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவற்றை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் நீக்குமாறு, மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Share.

Comments are closed.