பிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்! இப்படி ஒரு மாஸான கதாபாத்திரமாம் – போடு பிரம்மாண்டம்

0

அண்மையில் வெளியான சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இப்போது டாப் ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கிலும் அவர் தனக்கான மார்கெட்டை பிடித்து விட்டார்.

அவருக்கு அங்கும் பேன்ஸ் கூட்டம் உருவாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் அவர் நடிப்பில் வெளியான மகாநதி படம் சூப்பர் ஹிட்டானது. அவருக்கு பலத்த பாராட்டுக்களை கொடுத்தது.

தற்போது அவர் பாகுபலி புகழ் பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளராம். ராம ராவண ராஜ்யம் என்னும் இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் ராவணனாகவும், ராம் சரண் ராமனாகவும் நடிக்கும் படத்தில் அவர் இணைகிறார். அதிலும் அவருக்கு சீதை வேடமாம். ஏற்கனவே இதில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com