Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

பிரி­யங்க மீது கைவைத்த அதி­கா­ரி­களை பதம் பார்த்த மைத்­திரி

0

லண்­ட­னில் உள்ள தூத­ரகப் பாது­காப்பு ஆலோ­ச­கர் பத­வி­யில் இருந்து பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னான்டோவை நீக்­கி­ய­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, அய­லு­ற­வுத்­துறை அமைச்­சின் அதி­கா­ரி­க­ளைக் கடு­மை­யாகக் கண்­டித்­துள்­ளார்.

புலம்­பெ­யர் தமி­ழர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்து கொண்ட காணொலி வெளி­யா­னதை அடுத்து, பிரி­கே­டி­யர் பிரி­யந்த பெர்­னான்­டோவை, பாது­காப்பு ஆலோ­ச­கர் பணி­யில் இருந்து இடை­நி­றுத்­து­வ­தாக அய­லு­ற­வுத்­துறை அமைச்சு அறி­வித்­தி­ருந்­தது.

அய­லு­ற­வுத்­துறை அமைச்­சின் இந்த உத்­த­ரவை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால நிறுத்­தி­னார். பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னான்­டோவை மீண்­டும் உட­ன­டி­யாகப் பணி­யில் இணைந்து கொள்­ளு­மா­றும் அறி­வித்­தி­ருந்­தார்.

பிரி­கே­டி­யர் பிரி­யங்க பணி இடை­நி­றுத்­தம் செய்­யப்­பட்­ட­தால் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எரிச்­ச­ல­டைந்­தார் என்­றும், அவர் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்த அய­லு­ற­வுத்­துறை அமைச்­சின் அதி­கா­ரி­களைக் கண்­டித்தார் என்­றும் கொழும்பு ஆங்­கில ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com