பிரித்தானியா-அமெரிக்கா உறவில் விரிசல்.. வலுக்கும் டிரம்ப்-தெரசா மே வார்த்தை போர்

0

பிரெக்ஸிட் விவகாரத்தை கையாளுதலில், பிரித்தானியா பிரதமர் குழப்பம் ஏற்படுத்தியதாக,அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவதூறாக பேசியதற்கு, பிரித்தானியா பிரதமர் தெரசா மே பதிலடி கொடுத்துள்ளார்.

தூதரக மின்னஞ்சல்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி தகுதியற்றவர் என்றும் அவரது வெள்ளை மாளிளை தனித்துவமாக செயல்படவில்லை என்றும் அமெரிக்காவிற்கான பிரித்தானியா தூதர் டாரோச் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், பிரித்தானியா மற்றும் பிரதமர் தெரேசா மே ஆகியோர் பிரெக்ஸிட்டைக் கையாண்ட விதம் குறித்து நான் மிகவும் விமர்சித்தேன். அவரும் அவருடைய பிரதிநிதிகளும் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர். பிரெக்ஸிட்டை எப்படி செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன், ஆனால் அவர் வேறு வழியில் செல்ல முடிவு செய்தார்.

எனக்கு பிரித்தானியா தூதரை தெரியாது, ஆனால் அவரை நான் விரும்பவில்லை, அமெரிக்காவிற்குள் நாங்கள் இனி அவருடன் எந்த ஒப்பந்தமும் வைத்துக்கொள்ள மாட்டோம். அற்புதமான பிரித்தானியாவிற்கான நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் விரைவில் ஒரு புதிய பிரதமரைப் பெறுவார்கள். கடந்த மாதம் அற்புதமான மாநில வருகையை நான் முழுமையாக அனுபவித்தபோது, நான் பிரித்தானியா ராணியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என டிரம்ப் தெரவித்துள்ளார்.

டிரம்பின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிற்கான பிரித்தானியா தூதர் சர் கிம் டாரோச்க்கு, பிரித்தானியா பிரதமர் தெரசா மே தொடர்ந்து முழு ஆதரவு அளிப்பதாக பிரித்தானியா அரசாங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com