பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு நடக்கும் மாற்றங்கள் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள்?

0

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஒரு பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசிவிட்டார்.

இதில் ஒரு குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.

இது தொடர்பான வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பெண் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்ததில் இருந்ததாக, அந்த பெண்ணில் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனால் நம்முடைய செயலின் விளைவு என்ன என்று தெரியாத நிலையில், அந்த தாய் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.

வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பெண்ணை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு 5 முதல் 7 நாட்கள் முன் இந்த காலக்கட்டம் துவங்குகிறது.

உடலில் ஏற்படும் மாற்றங்கள், பெண்ணிற்கு மனதளவில் அழுத்ததை ஏற்படுத்துகிறது. குறிப்பிட ஒரு பொருளை சாப்பிட, விருப்பம் அல்லது வெறுப்பு, கோபம் வருவது, படபடப்பு, வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து வித்தியாசம் ஏற்படுவதை கவனிக்கலாம்.

டெல்லியில் உள்ள பெண்கள் நல மருத்துவர் அதித்தி ஆச்சார்யாவிடம் பெண்களுக்கு மாதவிடாயின் போது, ஏற்படும் அழுத்தம் குறித்து கேட்ட போது, பெண்களின் உடலில் இருக்கும் ஹார்மோன்களின் மாறுதல்களால் பிஎம்ஸ் ஏற்படுகிறது.

சிலருக்கு உடல் வலி அதிகரிக்கும், சிலருக்கு வயிற்று வலியும், மார்பகத்தின் அருகேயும் வலி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படலாம், சில பெண்களின் மனநிலை திடீரென்று மாறலாம், காரணமே இல்லாமல் அழுகை வரலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், 90 சதவீத பெண்கள் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்ததால், பாதிக்கப்படுகின்றனர். இதில் 40 சதவீத பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதிலும் 2 முதல் 5 சதவீதமான பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாகவே ஏற்படுகிறது.

இது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. இந்த சமயத்தில் பெண்களின் மனம் அமைதியாக இருக்க வேண்டியது கட்டாயம். இது போன்ற நிலையில், நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் பெண்கள், குடும்பத்தினரும் தங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர்.

இதே போன்று கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடைய தோழியின் மனநிலையில் திடீரென்று ஏன் இப்படி ஒரு மாறுதல் என்று புரியாமல் இருந்துள்ளார். நாங்கள் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாகவே இருந்து வந்தோம்.

எனக்கு மாதவிடாய் பிரச்சனை பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் என்னுடைய தோழி ஒரு நாள் திடீரென்று காரணமே தெரியாமல், கோபப்பட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, நானும் பதிலுக்கு கோபத்தில் திட்டிவிட்டு சென்றுவிட்டேன்.

கூகுளில் வேறு ஒரு செய்தியை தேடிக் கொண்டிருந்த போது, எதிர்பார்தவிதமாக மாதவிடாய் தொடர்பான தகவல்களை பார்த்தேன், அப்போது தான் விடயமே புரிந்தது.

மதவிடாய் துவங்குவதற்கு முன் பெண்களின் மனதில் அழுத்தம் உண்டாகலாம் என்றும் அதற்கு பெண்களின் சுபாவம் காரணமில்லை, ஹார்மோன்களே காரணம் என்பதை அறிந்தேன் என்று கூறியுள்ளார்.

மருத்துவர் ஒருவர் மாதவிடாய் பிரச்சனை பற்றி கூறுகையில், தன்னிடம் வரும் கணவன்-மனைவிகளில் பலரின் கணவர்களுக்கு மாதவிடாய் மற்றும் மாதவிடாய்க்கு முன்பு வரும் மன அழுத்தங்கள் பற்றி ஒன்று தெரிவதில்லை.

தன் வாழ்க்கை துணை எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்பதால், இது பெண்களுக்கு அதிக எரிச்சலை கொடுக்கிறது.

இதனால் இருவருக்கும் பிரச்சனை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com