பெண்களே! ஒரே வாரத்தில் உதட்டிற்கு மேல் மீசையை அகற்ற வேண்டுமா? இதோ எளிய தீர்வு

0

பொதுவாக ஆண்களுக்கு மாதிரியே பெண்களும் மீசை வளருவதுண்டு. இருப்பினும் பெண்களுக்கு ஆண்களை போன்று அடர்த்தியாக வளருவதில்லை.

பெண்களுக்கு இம்மாதிரி உதட்டிற்கு மேலே முடி வளர்வதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம்.

பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி வளர்ந்தால், அது அப்பெண்ணின் தோற்றத்தை வித்தியாசமாக காட்டும். இதனால் பல பெண்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கும்.

பல பெண்கள் உதட்டிற்கு மேலே வளரும் முடியை நீக்க அழகு நிலையங்களுக்குச் சென்று த்ரெட்டிங், வாக்சிங் செய்வதுண்டு. இது பலரையும் எரிசலுட்டுவதாக இருக்கும்.

உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க பல அழகு சாதனப் பொருட்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து பொருட்களுமே உதட்டின் மேல் பகுதியில் உள்ள முடியைப் போக்காது.

அதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு உதட்டின் மேல் வளரும் முடியைப் போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

இரவு தூங்கும் முன் துவரம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் உருளைக்கிழங்கு ஜூஸ், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உதட்டிற்கு மேலே முடி வளர்வதைத் தடுக்கும்.

உருளைக்கிழங்கு ஒரு இயற்கை ஹேர் ப்ளீச்சிங் இருப்பதனால் சருமத்துளைகளை மூடச் செய்து, முடியை நீக்க உதவியாக இருக்கும்.

<a

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com