பெண்களை சபரிமலைக்கு அழைக்கும் பிணராய் விஜயன்? தகவல் பரவியதால் அலைமோதும் கூட்டம்

0

பெண்களை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய வைக்க, முதலமைச்சர் பிணராய் விஜயன் முயற்சிகிறார், என்ற தகவல் பரவியதால் போரட்டகாரர்கள் பம்பை முதல் சன்னிதானம் வரை தங்கி உள்ளனர்.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் செல்ல கூடதென்பது ஐதீகமாக இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதி மன்றம் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்து உத்தரவிட்டது.

இதனை அடுத்து பல பெண்களும் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். ஆனால் போராட்டகாரர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இரு பெண்கள் போராட்டகாரர்களுக்கு தெரியாமல் அதிகாலையில் சாமி தரிசனம் செய்து திரும்பினர். இதனை தொடர்ந்து வேறொரு பெண்ணும் பொலிசாரின் உதவியுடன் சாமி தரிசனம் செய்தார் என்ற தகவல் பரவியது.

இந்நிலையில் முதலமைச்சரும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராய் விஜயன் மேலும் பல பெண்களை ஐய்யப்பன் கோவிலுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் பரவியதை அடுத்து. போராட்டகாரர்கள் 60க்கும் மேற்பட்டோர் தலமையில் பம்பை முதல் கோவில் சன்னிதானம் வரை 13 குழுகளாக பிரிந்து தங்கி உள்ளனர்.

இவர்கள் மகரவிளக்கு பூஜை வரை தங்கி இருப்பர் என்று என்று தெரிகிறது. மேலும் அங்கு பெண்கள் வந்தால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க போவதாக அறிவித்துள்ளனர்.

சபரிமலையில், பல்வேறு பஜனைகள் நடைபெற்று வருவதால் தொடர்ந்து கூட்டம் அதிகரித்தே காணப்படுகின்றது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com