பேன் தொல்லையால் அவதியா? இதோ சூப்பர் டிப்ஸ்

0

பேன் தலையில் உள்ள ஒட்டுண்ணி வகையில் ஒன்றாகும். இது பேன் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும்.

ஒருமுறை பேன் வந்துவிட்டால், அதனைப் போக்குவது என்பது அவ்வளவு கடினமான செயலாகும்.

இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால் போதும்.

டிப்ஸ் 1

10 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, அதனை பேஸ்ட் செய்து, அதில் 2-3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் தலையை அலசினால், பேன் தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.

டிப்ஸ் 2

பேபி ஆயிலை தலையில் தடவி, பின் பேன் சீப்பு கொண்டு சீவினால், பேன் வெளியே வந்துவிடுவதோடு, அதனைத் தொடர்ந்து சோப்புத்தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனைக் கொண்டு தலையை அலசி விட வேண்டும்.

பின் படுக்கும் முன், சிறிது வெள்ளை வினிகரை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஷவர் கேப் அல்லது துணியால் தலையைச் சுற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

இப்படி 3-4 முறை தொடர்ந்து செய்தால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

டிப்ஸ் 3

ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது தலையில தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷவர் கேப் அல்லது துணியால் தலையைச் சுற்றி, மறுநாள் காலையில் தலைக்கு மூலிகை ஷாம்பு போட்டு குளித்தால், பேன் தொல்லை நீங்கும்.

டிப்ஸ் 4

1/4 கப் உப்பில் 1/4 கப் வினிகர் சேர்த்து கலந்து, அந்த கலவையைத் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தெளித்து, 2 மணிநேரம் ஊற வைத்து பின் தலையை ஷாம்பு போட்டு அலசினால், பேன் பிரச்சனை விரைவில் குணமாகும்.

டிப்ஸ் 5

பெட்ரோலியம் ஜெல்லியை தலையில் ஸ்காப்பில் படும்படி தடவி, ஷவர் கேப் கொண்டு தலையைச் சுற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் பேபி ஆயில் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்து, பின் சீப்பு கொண்டு தலையை சீவினால், பேன் கையோடு வந்துவிடும்.

டிப்ஸ் 6

1 டீஸ்பூன் டீ-ட்ரீ ஆயிலில் சிறிது ஷாம்பு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அந்த கலவையை தலையில் தடவி ஷவர் கேப் கொண்டு தலையை மூடி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இறுதியில் பேன் சீப்பு பயன்படுத்தி தலையை சீவினால், பேன் வெளியேறிவிடும்.

டிப்ஸ் 7

முதலில் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, தலையை அலச வேண்டும். பின் தலையை நன்கு உலர்த்த வேண்டும்.

பிறகு இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தேங்காய் எண்ணெயைத் தடவி ஷவர் கேப் அல்லது துணி கொண்டு தலையை நன்கு சுற்றி, 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் தலையை சீப்பு பயன்படுத்தி நன்கு சீவி, பின் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

டிப்ஸ் 8

வெள்ளை வினிகரை நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி தலையில் ஷவர் கேப் அல்லது துணியைச் சுற்றி, 1-2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் சீப்பை வினிகரில் நனைத்து, தலையை சீவினால், பேன் வெளியேறிவிடும்.

டிப்ஸ் 9

1/4 கப் நல்லெண்ணெயில், 1/4 கப்பில் பாதி வேப்ப எண்ணெய், 1 டீஸ்பூன் டீ-ட்ரீ ஆயில், 1 1/2 டீஸ்பூன் யூகலிப்டஸ் ஆயில் மற்றும் ரோஸ்மேரி ஆயில் மற்றும் 10 துளிகள் லவெண்டர் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பிறகு தலையை ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தி அலச வேண்டும்.

பின் எண்ணெய் கலவையைத் தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலையை சீப்பு பயன்படுத்தி சீவினால், பேன் இறந்த நிலையில் வெளியேறும்.

இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இப்படி 1-2 வாரம் தினமும் செய்து வந்தால், பேன் போய்விடும்.

டிப்ஸ் 10

இரவில் படுக்கும் போது, மயோனைஸை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, ஷவர் கேப் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி தினமும் ஒரு வாரம் செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com