பொலிஸரின் திடீர் அதிரடியால் 941 பேர் கைது

0

கடந்த நான்கு நாட்கள் மேற்கொண்ட பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 941 பேர் கைது செய்யபோட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய குற்றச்சத்திலேயே குறித்த சாரதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த 941 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த தினத்திற்குள் வீதி விதிமுறை மீறல் தொடர்பாக 29,461 வழக்குகள் தாக்கல் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால் 413 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com