மகனை நெஞ்சோடு அணைத்தபடி 330 அடி உயரத்திலிருந்து குதித்த தாய்: பொதுமக்கள் முன் நடந்தேறிய சோகம்

0

கொலம்பியா நாட்டில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட விரக்தியில் தாய், ஒருவர் தன்னுடைய 10 வயது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா நாட்டின் Tolima பகுதியில் உள்ள 330 அடி கொண்ட உயரமான பாலத்தின் விளிம்பில் நின்று கொண்டு தாய் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், பேச்சு வார்த்தை கொடுத்து முறியடிக்க நினைத்தனர்.

ஆனால் அவர் தன்னுடைய முடியில் தெளிவாக இருந்ததால், கெஞ்சியும் பார்த்தனர்.

ஆனால் அதற்குள் அந்த பெண், தன்னுடைய 10 வயது மகனை நெஞ்சோடு சேர்ந்து அணைத்தவறே குதித்தார்.

இதனை பார்த்ததும் பொதுமக்கள் அனைவரும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டனர். பொலிஸாரும் ஒருவரை ஒருவர் கட்டியணைப்படி தேற்ற ஆரம்பித்து விட்டனர்.

இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்கொலை செய்துகொண்ட தாய் 32 வயதான ஜெஸி பாவோலா மோரேனோ குரூஸ் மற்றும் அவருடைய மகன் மே சேபாலஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பெண் வாடகை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு துரத்திய விரக்தியில் இந்த முடிவை எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரின் உடல்களையும் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com