மகள் திருமணத்துக்காக நடத்தப்பட்ட 20 நிமிட பூஜை: முகேஷ் அம்பானி அளித்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

0

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து கோவிலில் 20 நிமிட வழிபாடு நடத்திய நிலையில் ஒரு கோடி நன்கொடை அளித்துள்ளார்.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷா அம்பானி, பிராமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிராமலின் மகனான ஆனந்த பிராமல் என்பவரை காதலித்து வந்தார்.

இதையடுத்து இரு வீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த மே மாதம் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இதற்கான திருமண அழைப்பிதழை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு எடுத்துச் சென்று முகேஷ் அம்பானி வழிபாடு நடத்தியுள்ளார்.

அவர் சுமார் 20 நிமிடங்கள் அங்கு பூஜைகள் செய்துவிட்டு, ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com