மனைவி சாக்‌ஷியின் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடிய டோனி! வைரலாகும் புகைப்படங்கள்

0

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாத டோனி, தனது மனைவி சாக்‌ஷியின் 30வது பிறந்தநாளை மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தில் சக அணி வீரர் ஹர்த்திக் பாண்டியா மற்றும் பாடகி சோபி சவுத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஹர்த்திக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை.

சாக்‌ஷி தனது தோழிகளுடன் கைகோர்த்து பாடல் பாடி விளையாடி மகிழ்ந்தார். மேலும், சாக்‌ஷி மற்றும் பாண்டியா ஆகியோர் பாடகர் ராகுல் வைத்யாவுடன் இணைந்து, பிரபல ஹிந்தி பாடலான ‘சன்னா மேரியா’-வை பாடினர்.

இந்த பிறந்தநாள் கொண்டாடத்தின் போது டோனி தனது மகள், மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், டோனி மற்றும் பாண்டியா இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com