மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தமாக இருப்பது?

0

மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.

இது ஒவ்வாரு மாதமும் 3 அல்லது 4 நாட்கள் நிலைத்து இருக்கும்.

இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும் போது ஏற்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் பலரும் நப்கினையே பயன்படுத்துண்டு. அத்துடன் Menstrual Cup,Tampon ஆகியவற்றை பயன்படுத்துவார்.

இருப்பினும் இதில் நப்கினையே பெரும்பாலும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றது.

பொதுவாக சிலர் ஒரு நப்கினை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. இதனால் கிருமிகள் உருவாகி நோயை ஏற்படுத்தி விடுகின்றது.

மாதவிடாய் காலங்களில் நாம் சுத்தமாக இருப்பது அவசியமானதாகும்.

அந்தவகையில் மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தமாக இருப்பது என்பதை இங்கு பார்ப்போம்.

  • ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை நப்கினை மாற்றுவது அவசியம். குறைவான இரத்தப்போக்கு நாட்களிலும் அவ்வாறு மாற்றுவது அவசியம்.
  • பயன்படுத்தப்பட்ட நப்கினை பொலிதீன் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் போடுவதும் அவசியம்.
  • இரத்தப்போக்கு வரும் பகுதியை சுத்தமாகக் கழுவுவது அவசியம். அங்கு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்துக் கழுவினால் வலி சற்று குறையும். இரத்தப் போக்கும் சீராக வரும்.
  • இரத்தப் போக்கு வரும் இடத்தை கழுவும் போது சோப்பு, வாசனைக் கலந்த கெமிக்கல் திரவியங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது வெஜினாவின் வழியாக உள்ளே சென்று பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
  • நப்கினை மாற்றுவது போல் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் டவலைக் கூட சுத்தமாகப் பயன்படுத்துவது அவசியம். வெஜினா போன்ற இடங்களைத் துடைக்கும்போது டவல் மூலமாக கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் துடைப்பதற்கு துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்துங்கள்.
  • மாதவிடாய் கால மூன்று நாட்கள் பயன்படுத்திய ஆடைகளை சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு கழுவி வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். நன்கு வெயில் படும்படி காய வையுங்கள். முடிந்தால் டெட்டால் (dettol) பயன்படுத்தி அலசலாம்.
  • நப்கினை மாற்றுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சுத்தமாகக் கழுவுவது அவசியம். உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாவால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.<
Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com