முதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்

0

இந்தியாவில் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரியும் நபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கரில் உள்ள பக்தோல் கிராமத்தை சேர்ந்தவர் அனில் பைகரா. இவர் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் குழந்தையில்லை.

இந்நிலையில் அதே ஊரில் அங்கன்வாடியில் பணிபுரியும் ஒரு பெண்ணை அனில் காதலித்து வந்தார்.

பல்வேறு ஊர்களில் பணிபுரிந்த அனில் ஊருக்கு வரும்போதெல்லாம் மனைவியுடன் நேரத்தை செலவிடுவதை விட அதிக நேரத்தை தனது காதலிடமே செலவிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று அனில் செய்த விசித்திர காரியத்தை பார்த்து ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அதாவது தனது காதலியை திருமணம் செய்து கொண்ட அனில் அதன் உடன் தனது மனைவியையும் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

அரசு பணியில் இருப்பவர் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது குற்றம் என்ற நிலையில் அனில் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

அனில் கூறுகையில், எனக்கு முதல் திருமணம் மூலம் குழந்தையில்லை, அதனால் தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com