Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்குமாறு கொண்டு வரப்பட்ட பிரேரணை வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

0

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்குமாறு கொண்டு வரப்பட்ட பிரேரணை வட மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாணசபையின் 111ஆவது அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள பேரவையில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமென்ற பிரேரணையினை ரி.லிங்கநாதன் முன்மொழிந்தார்.அதன் பின்னர் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாகாணசபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது 6000 ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 2018ஆம் ஆண்டில் இருந்து அந்த சம்பளம் முழுமையாக கிடைக்கும்.இருந்தும், சம்பளத்தினை அதிகரிக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்களால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்பளம் வழங்க அரசாங்கத்திடம் அவ்வளவு நிதி இருக்குமா என்பது சந்தேகம்.

இருந்தாலும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் வட மாகாணசபை அமைச்சர் சிவநேசன் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சியில் 237 முன்பள்ளிகள் உள்ளன. சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் முன்பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

அதனால், அங்கு முரண்பாடுகள் காணப்படுகின்றன. நிகழ்வுகளின் போது மாகாண கொடிகள் ஏற்றப்படுவதில்லை. அத்துடன் இராணுவத்தினரால் வழங்கப்படும் சீருடைகள் போடப்படுகின்றன.இதனால் அங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றதுடன், அங்குள்ள மாணவர்களும் பாதிக்கப்படுகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.