Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

மூக்கில் கரும்புள்ளிகளை போக்குவது எப்படி

0

பட்டை மற்றும் தேன்: பட்டை மற்றும் தேன் இதற்கு மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள

 

நீரில் கழுவி விட வேண்டும். ஒட்ஸ் மற்றும் தேன் : ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். கிரீன் டீ கிரீன் டீ

இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். உப்பு மற்றும் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முல்தானி மெட்டி முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.

Share.

Comments are closed.