Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

மைத்திரி – மகிந்த அணிகளை இணைத்த ஸ்ரீலங்கா தோல்வியடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மைத்திரி – மகிந்த அணிகளை இணைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரசியல் ரீதியாக வலுப்படுத்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் தோல்வியடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரண்டு அணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்த கடிதத்தின் மூலம் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர கூறியிருந்தார்.

இதனையடுத்து கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கடந்த செவ்வாய் கிழமை கூடி இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து விலகினால், அமைச்சர் மகிந்த அமரவீரவின் யோசனையை ஆராய்ந்து பார்க்க முடியும் என கூட்டத்தில் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு இருக்குமாயின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்தாலும் அப்படியான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் ரீதியாக ஏமாற்றவே இப்படியான கூட்டத்தை திட்டமிட்டுள்ளனர் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.அதேவேளை தமக்கு அப்படியான அழைப்பு கடிதம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறியுள்ளனர்.

Share.

Comments are closed.