மோடியை இருதடவைகள் சந்தித்த ரணில்! அதிருப்தியில் மைத்திரி

0

கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு தடவைகள் சந்தித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்க அமைச்சர் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விசனத்தை வெளியிட்ட பின்னர் பிரதமர் ரணில் நேரடியாக விமான நிலையம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.

அத்துடன் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரையும், கொழும்பு சந்திப்பு முடித்த பின்னரும் என இரு தடவைகள் இந்தியப் பிரதமருடன் ரணில் காரில் ஒன்றாகப் பயணித்தார்.

இந்த இரண்டு சந்திப்புக்களின் போதும் இலங்கை அரசியல் தொடர்பான உள்வீட்டு விவகாரங்களை ரணில், இந்தியப் பிரதமரிடம் தெரிவித்திருக்கலாம் என ஜனாதிபதி தரப்பு கருதுவதுடன், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே இவ்விடயம் குறித்து ஜனாதிபதி கடும் விசனத்திற்குள்ளாகியுள்ளார்.

ஏற்கனவே தெரிவுக்குழு விவகாரத்தால் ரணிலுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை அமைச்சரவைக் கூட்ட இடைநிறுத்தம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் மோடி – ரணில் சந்திப்பு அந்த நெருக்கடியை மேலும் தீவிர நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com