மோடி ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து கட்சிக்கு அளிக்கிறார்! சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு –

0

ஆந்திரப் பிரதேச மாநிலம் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பா.ஜ.க பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் ஹெலிகாப்டர் மூலம் சித்ரதுர்காவிற்கு வந்து இறங்கினார். அவரது பாதுகாப்பிற்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

அவற்றில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை இறக்கிய பாதுகாப்பு வீரர்கள், அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியாத நிலையில், அதில் பணம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சைப் பேச்சு எழுந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வருகிறார்.

தனக்கு அளிக்கப்படும் உயர் பாதுகாப்பை பயன்படுத்தி, அவற்றை பா.ஜ.க பிரமுகர்களுக்கு அளிக்கிறார். அதன்மூலம் இந்த தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு உள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com