யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு பொதுப்பட்டமளிப்பு விழா

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று ஐந்து பிரதான அமர்வுகளாக நடைபெற்றுள்ளது.முதலாம் நாள் அமர்வில் உயர் பட்டப் படிப்புகள் பீடம்,முகாமைத்துவ வணிக பீடம்,கலைப்பீடம், சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியாவளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மங்கள வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய கலாச்சார முறைப்படி பட்டதாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பிரதான மண்டபத்தில் பட்டம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, பரிந்துரைக்கப்பட்ட சகல பட்டதாரிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் பட்டங்களை வழங்கி வைத்துள்ளதுடன், அவர்களை பட்டதாரிகளாக அறிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com