Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

ரஷ்ய விமானப் படையின் 105ஆவது ஆண்டு நிறைவு மொஸ்கோ மாபெரும் விமான சாகச நிகழ்வு

0

ரஷ்ய விமானப் படையின் 105ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக, மொஸ்கோ மாபெரும் விமான சாகச நிகழ்வொன்றை நடத்தியிருந்தது.

150 வானூர்திகள் வானில் பறக்கவிடப்பட்டு மாபெரும் நிகழ்வாக நேற்று முன்தினம் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

ரஷ்ய விமானப் படையும், அதன் விமானிகளும் பல நுட்பங்களை தெரிந்து வைத்து அவர்களினால் நடத்தப்பட்ட சாகச நிகழ்வானது அற்புதமானது. இவ்வாறானதொரு விமான சாகச நிகழ்வை இதற்கு முன்னர் பார்த்திருக்கவில்லை என பார்வையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாட்டை எண்ணியும், நாட்டை பாதுகாக்கும் விமான படையினரை எண்ணியும் தாம் மிகுந்த பெருமை கொள்வதாக மற்றுமொருவர் தெரிவித்தார்.

ரஷ்ய விமானப் படை தினம் ஆண்டுதோறும் ஓகஸ்ட் 12ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டு வருகிறது. இத்தினமானது கடந்த 2006ஆம் ஆண்டு முதல் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.