வலியுடன் விளையாடினாரா ஜடேஜா? கிளம்பியது சர்ச்சை

0

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐடேஜா காயத்துடன் விளையாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஐடேஜா சேர்க்கப்படாததற்கு, அவர் காயத்தால் அவதிப்படுவதாக ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

அவரின் இந்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது, காயத்துடன் இருக்கும் ஒருவரை ஏன் நீண்ட நேரம் பீல்டிங் செய்ய விட வேண்டும்? காயத்துடன் இருப்பவரை ஏன் அவுஸ்திரேலியா அழைத்து வர வேண்டும்? என கேள்விகள் எழுந்துள்ளன.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டது, மேலும் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் தோள்பட்டையில் வலி இருந்ததாகவும், ஊசி மூலம் மருந்து செலுத்தியதாகவும் தெரிகிறது.

அப்படியென்றால் டெஸ்ட் போட்டிகளில் ஏன் அவரை நீண்ட நேரம் கோஹ்லி பீல்டிங் செய்ய வைத்தார்? உத்தேச அணியில் அவரது பெயரை இணைத்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து புறப்படும் போது அவர் நலமாக இருந்ததாகவும், தற்போது மூன்றாவது டெஸ்டுக்கு தயாராகிவிட்டார் எனவும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com