Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

வவுனியாவில் விசமிகள் சிலரால் தீ வைத்து சேதமாக்கப்பட்ட வேளாங்கன்னி சிலை புனர் நிர்மாணம்

0

வவுனியாவில் விசமிகள் சிலரால் தீ வைத்து சேதமாக்கப்பட்ட வேளாங்கன்னி சிலை புனர் நிர்மாணம் செய்து இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்திருந்த வேளாங்கன்னி சிலையானது ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி இரவு விசமிகள் சிலரால் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிலையானது, உக்குளாங்குளம் கிராம மக்களின் பங்களிப்புடன் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சிலை திறப்பு விழாவின் பின்னர் அருட்பணி லக்ஸ்ரன் டி சில்வா அவர்களால் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்புக் குழு மத்திய குழு ஆலோசகர் தியாகராஜா மகேந்திரராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.பரமேஸ்வரன், பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ரி.துரைசிங்கம், அப்பகுதி ஆலயங்களில் தலைவர்கள், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டி.இ.எ.விஜயகோன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Share.

Comments are closed.