Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

வாழைப்பழ பணியாரம்

0

தேவையான பொருட்கள்: 
கோதுமை மா– அரை கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல் – அரை கப்
துருவிய கருப்பட்டி அல்லது துருவிய வெல்லம் – இனிப்புக்கேற்ப
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை :
கோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும். வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், துருவிய வெல்லம், ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கரைத்த கோதுமை மா கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கலவை சற்று கெட்டியாக இருக்குமாறு கரைத்து கொள்ளவும்.

குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மிதமான தீயில் ஒவ்வொரு குழியிலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி அதனைச்சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் மறுபக்கம் திருப்பி வேவைத்து எடுக்கவும்.

சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்!

Share.

Comments are closed.