Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

விண்வெளியில் பீட்சா செய்து சாப்பிட்ட ஆய்வாளர்கள்…..வைரல் வீடியோ

0

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வாளர்கள் பீட்சா செய்து சாப்பிட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளியில் ஈர்ப்பு விசை அற்ற நிலையில், அவர்கள் எப்படி அன்றாட வாழ்வை நகர்த்துகிறார்கள் என்பது தொடர்பாக, உடற்பயிற்சி செய்வது, தண்ணீர் அருந்துவது என பல வீடியோக்களை நாசா வெளியிட்டுள்ளது.

தற்போது, ஆய்வாளர்கள் பீட்சா செய்து சாப்பிட்ட சுவாரசியமான வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் பீட்சா தயாரிக்கும் காட்சியும், பின்னர் விண்வெளியில் மிதக்கும் அந்த பீட்சாவை அனைவரும் பங்கிட்டு சாப்பிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share.

Comments are closed.