விராட் கோஹ்லியின் தற்போதைய வருமானம் எவ்வளவு தெரியுமா?

0

உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இடம் பிடித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இடம்பிடித்துள்ளார்.

விராட் கோஹ்லி ஒரே நேரத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் இந்திய அணித்தலைவர் என்ற அந்தஸ்தில் இருப்பதால், அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதன்மூலம் கோஹ்லியின் வருமானமும் உயர்ந்து வருகிறது.

கடந்த 12 மாதங்களில் 24 மில்லியன் டொலர்கள் வருமானத்தை கோஹ்லி ஈட்டியுள்ளார். இதில் சுமார் 20 மில்லியன் டொலர்களை விளம்பரத்தின் மூலமாகவும், 4 மில்லியன் டொலர்களை கிரிக்கெட்டின் மூலமாகவும் கோஹ்லி சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால், அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் 83வது இடத்தை அவர் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை மெஸ்சியும் பிடித்துள்ளார்.

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கால்பந்து வீரர் செர்ஜியோ அகுரோ ஆகியோரை விட கோஹ்லி அதிகம் சம்பாதிக்கும் வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com