விருது விழாவில் விஜய்யை பற்றி பெருமையாக கூறிய பிரபலம்! அரங்கம் நிறைந்த கரகோசம்

0

விஜய் சினிமா வட்டாரத்தில் சீனியர் நடிகராக இருந்தாலும் ரசிகர்களுக்கு அவர் தளபதி தான். மெர்சல் படத்திற்கு முன் வரை அவரை இளையதளபதி என அன்போடு அழைத்து வந்தார்கள்.

அவர் மற்றவர்களின் முயற்சியையும், உழைப்பையும் பாராட்டவும், உற்சாகப்படுத்துவதற்கும் தவறுவதில்லை. அவரின் ரெஃபரன்ஸ் இல்லாத இடங்களே இல்லை என சொல்லலாம்.

அவரை பற்றி பலர் பெருமையுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். அதே போல அண்மையில் முக்கிய பத்திரிக்கை ஒன்றின் விருது வழங்கும் விழா நடந்தது.

இதில் சிறந்த இயக்குனருக்காக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தை இயக்கிய பாடகர், பாடலாசிரியர், நடிகர் அருண் ராஜா காமராஜூக்கு கிடைத்துள்ளது.

இதற்கு நன்றி சொல்லும் போது மேடையில் பேசிய அவர் இந்த படத்தை விஜய் சாருடன் சேர்ந்து பார்த்தேன். அப்போது அவர் இது தான் உங்கள் முதல் படமோ என கூறினார். மேலும் அப்படத்தை மிகவும் ரசித்து பார்த்தாராம். டைட்டில் கார்டில் என்னுடைய பேர் வந்தபோது அவர் கைதட்டினார்.

வாழ்க்கையில் இதை தவிர சிறந்த விருது வேறென்ன இருக்கிறது என கூறியுள்ளார்…

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com