விவசாயிகள் கடன் சுமையினால் தற்கொலைகளில் ஈடுபடுகின்றனர்

0

அம்பாறை மாவட்ட விவசாயிகள் கடன் சுமையினை ஈடுசெய்ய முடியாது தற்கொலைகளை மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விந்தன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற குழு நிலை விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் திருகோவில் ஆலயடி வேம்பு, நாவிதன்வெளி, பொதுவில் போன்ற பிரதேசங்கள் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகும்.

குறித்த பிரதேசங்களில் குளங்கள் காணப்பட்ட போதிலும் அவை புணரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இவ்வாறு குளங்கள் புணரமைக்கப்பட்டால் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவதுடன், அபிவிருத்தி முன்னேற்றங்களும் இடம்பெறும்.

குறிப்பாகவுள்ள சில குளங்களை ஒன்றிணைப்பதன் மூலம் பாரிய நீர்ப்பாசன திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் கூறிய போது அவர் செய்து தருவதாக தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இந்த வரவு செலவு திட்டதில் அதற்கான நீதி ஒதுக்கப்பட வேண்டும் என நான் இந்த வேளையில் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

குறித்த திட்டதின் மூலம் விவசயிகளும், கால்நடைகளுக்கும் நீர்கிடைப்பதனோடு, நீர் தட்டுப்பாடும் நீங்க்கும் நீர்பாசணம் பாரிய முன்னேற்றமடையும்.

இதேவேளை விவசாயிகளினால் நெல்லினை சரியான விலைக்கு விற்க முடியாமல் நெல் மாபியாக்கள் உருவாகியுள்ளனர்.

நெல்லினை விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பதற்கான காரணம் விவசாயிகளால் நெல்லை காய வைத்து உரிய முறையில் விவசாய செயற்பாட்டினை நடத்த முடியாமல் உள்ளமையே ஆகும்.

இதனை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நெல்லினை காயவைத்து உரிய முறையில் உற்பத்தி நடத்துவதற்கான இடத்தினை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

2500க்கான விற்பனை நெல்லினை நெல் மாபியாக்கள் 1500க்கு கொள்வனவு செய்தமையால் விவசாயிகளால் கடன் சுமையை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டதால் அவர்கள் தற்கொலைகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே விவசாயிகளுக்கு தேவையான களஞ்சியசாலைகள், நெல் காயவைப்பதற்கான லயங்கள், விவசாயத்தை மேற்கொள்வதற்கான இயந்திரம் போன்ற தேவைகளை செய்ய உதவி வழங்க வேண்டும்.

இந்நிலையில், குறித்த பிரதேசங்களில் 7000ற்கும் மேற்பட்டோர் வீடற்ற நிலைகளில் காணப்படுகின்றமையால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்தி செய்வதற்காகவும், வீடற்றோருக்கு வீடுகளை வழங்கவும் குறிப்பிடப்பட நிதிகள் ஒதுக்கிடப்பட வேண்டும்.

இதனையடுத்து மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் மொத்தமாக 5700ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுவதோடு, இதில் கிழக்கில் 8500 பேர் வேலையற்ற நிலையில் வீதிகளில் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது செய்யற்பட்டு வருகின்றனர்.

பட்டதாரி மணவர்களை விட தகுதி குறைந்தவர்கள் சிலர் அரசாங்க வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கான உடனடியாக அச வேலை வாய்ப்புக்கள் அல்லது தனியார் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் காலம் தாமதித்தால் பாரிய பிரச்சினை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com