வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரின் பொருட்களை கொள்ளையடிக்கும் விமான நிலைய அதிகாரி

0

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரின் பொருட்களை கொள்ளையடிக்கும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சட்டவிரோதமானதென கூறி குறித்த அதிகாரி தனக்காக எடுத்து கொள்வதாக கூறப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பயணிகளுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை குறுித்த அதிகாரி சுங்க பிரிவின் கீழ் எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியாயமான முறையில் கொண்டு வரப்படும் பொருட்களை சட்டவிரோதமானவை என கூறி குறித்த அதிகாரி கொள்ளையடிப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com