வெளியூரில் கணவன்: தனியாக இருந்த மனைவி எதிரில் படமெடுத்த நல்லபாம்பு… அடுத்து நடந்த சம்பவம்

0

புதுச்சேரியில் நள்ளிரவில் வீட்டுக்குள் பாம்பு புகுந்த நிலையில் மாநில முதல்வருக்கே வீட்டில் இருந்த பெண் போன் செய்த நிலையில்பாம்பு ஆள்வைத்து பிடிக்கப்பட்டது.

அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா. நேற்று முன்தினம் இரவு பணி காரணமாக இவர் வெளியூருக்குச் சென்றிருந்தார்.

அப்போது அவர் வீட்டில் மனைவி விஜயா, மகன், மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் உருளும் சத்தம்கேட்டதால் பயந்துபோன விஜயா விளக்கைப் போட்டுப் பார்த்திருக்கிறார்.

அப்போது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து சீறிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போன அவர் தன் பிள்ளைகளை எழுப்பி விட்டார்.

பின்னர் வனத்துறையின் தொலைபேசி எண்ணுக்கு அவர் போன் செய்துள்ளார்.

ஆனால் பலமுறை போன் செய்தும் அங்கு யாரும் போனை எடுக்கவில்லை.

அதனால், வேறு வழியின்றி அரசு டைரியில் இருந்த முதல்வர் நாராயணசாமியின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தார்.

அப்போது தூங்கிக்கொண்டிருந்த நாராயணசாமி போனை எடுத்துப் பேசினார். எதிர்முனையில் பேசிய விஜயா பொலிசுக்கும், வனத்துறைக்கும் போன் செய்தும் பயனில்லை.

அதனால் உங்களுக்குப் போன் செய்தேன் என்று சொன்னதோடு எங்களைக் காப்பாற்றுங்கள் என்றும் தெரிவித்தார்.

உடனே விஜயாவுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், விடுமுறையில் இருந்த கோபி, தாமரைச்செல்வன் இரண்டு ஊழியர்களை உடனே அனுப்பி பாம்பைப் பிடிக்கும்படி உத்தரவிட்டார்.

அதன் பிறகு விஜயா வீட்டிற்குச் சென்ற அவர்கள் அந்த விஷப் பாம்பை அங்கிருந்து பிடித்துச் சென்றனர்.

வீட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com