ஹிஸ்புல்லாவின் பல்கலைகழக அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

0

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்த அறிக்கை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைகழகம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையூடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஹிஸ்புல்லா, அவரின் புதல்வர் மற்றும் குறித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆகியோர் விசாரணைக் குழுவிற்கு நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது குறித்தபல்கலைகழகத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஆஷூ மாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com