Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோப்பநாயின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

0

வீடொன்றை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோப்பநாயின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நகைகள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருரையும் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குடியிருப்பொன்றை உடைத்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 17ஆம் திகதி உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹட்டன் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் நோர்வூட் பிரதேச குடியிருப்பொன்றின் சுவர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com