1000 விக்கெட்டுகள் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர்கள்! இமாலய சாதனை

0

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன்-ஸ்டூவர்ட் பிராட் இணைந்து 1000 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்பேடாஸில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டெஸ்ட் அரங்கில் ஆண்டர்சன் மொத்தமாக 567 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதேபோல் ஸ்டூவர்டு பிராட் டெஸ்டில் 433 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் இவர்களின் கூட்டணி 1000 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பிராட் தற்போது அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Getty Images

ஜேம்ஸ் ஆண்டர்சன் 146 டெஸ்ட்களில் மொத்தமாக 569 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்-ஷேன் வார்னே கூட்டணி 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது.

இலங்கையின் முரளிதரன்-சமிந்தா வாஸ் கூட்டணி 895 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது. இந்திய வீரர்களில் ஹர்பஜன் மற்றும் கும்ப்ளே கூட்டணி 501 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com