20 ஆண்டுகால சாதனை… நியூசிலாந்திடம் தோற்றாலும் கெத்து காட்டிய இலங்கை அணி தலைவர் கருணாரத்னே

0

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்த போது, அந்தணியின் தலைவர் டிமுத் கருணாரத்னே சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின, இப்போட்டியில் மிகவ்ம் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த போதும், இலங்கை அணியின் தலைவர் டிமுத் கருணாரத்னே துவக்க வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றது உலகக்கோப்பை தொடரில் முக்கிய சாதனையாக மாறியுள்ளது.

கருணாரத்னேவுக்கு முன் இதுவரை ஒரே ஒரு வீரர் மட்டுமே அந்த உலகக்கோப்பை தொடரில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றுள்ளார்.

1999 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவு அணியின் விக்கெட் கீப்பர் ரைட்லி ஜேக்கப்ஸ், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 49 ஓட்டங்கள் குவித்தார். 20 ஆண்டுகள் கழித்து அதே சாதனையை மீண்டும் செய்துள்ளார் இலங்கை அணியின் தலைவர் டிமுத் கருணாரத்னே.

மேலும் உலகளவில், ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதே சாதனையை செய்யும் 12வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com