Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

0


2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று ஆரம்பமாகும் குறித்த பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும், பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சார்த்திகள் நேர காலத்துடன் சமூகமளிக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பரீட்சார்த்திகள், பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை கட்டாயம் பரீட்சை நிலையங்களுக்கு எடுத்து வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 116 மத்திய நிலையங்களில் 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளது.

அத்துடன், இந்த பரீட்சையில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மேலும், ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினால் ரயிலில் செல்லும் மாணவர்களுக்கு விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share.

Comments are closed.