27 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை- டி.என்.ஏ மூலம் துப்பு துலங்கியது

0

பென்சில்வேனியாவில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலையில் டி.என்.ஏ சோதனை மூலம் கொலையாளியை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா சேர்ந்த ஆசிரியர் கிறிஸ்டிமிராக்(அப்போது 25 வயது). இவர் 1992 ஆம் ஆண்டு பள்ளி ஒன்றி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கும் உடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கிய வண்ணம் வீட்டை சென்றடைந்தார்

வீட்டில் சில மணி நேரத்திற்கு பின் , அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு. முகம் , தாடை, மார்பகம் ஆகியவை சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியும், எந்த தகவலும் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், ரோவ் என்பவரின் சகோதரி கிறிஸ்டியின் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். அவரின் டி.என்.ஏ சோதனை செய்ததில் தடையங்கள் ஒத்து போனது. தொடர்ந்து விசாரித்த பொலிசார், அவரது உதவி உடன் கொலை செய்த ரோவ்வை கண்டடைந்தனர்.

தொடர்ந்து ரோவ் பயன்படுத்திய தண்ணீர் அருந்தும் பாட்டில் மற்றும் மென்று போட்ட சுவிங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்த பொலிசார். ரோவ்தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்து கிறிஸ்டி-யின் சகோதரர் கூறியதாவது தொழில் ரீதியாகத்தான் ரோவை பார்த்து வந்தோம். கடந்த 26ஆண்டுகள் அவர்தான் இந்த செயலை செய்தார் என்று தெரியாமல் அவருடன் பழகி வந்தது வேதனையை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பரோல் இல்லாமல் வாழ்நாள் ஆயுள்தண்டனையை வழங்கி உள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com